சீனாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பிய 1,70,000 ஆயிரம் கணக்குகளை நீக்கியது ட்விட்டர்

சீனாவிற்கு ஆதரவாக கொரோனா தொடர்பான கருத்துக்களை பரப்பிய சுமார் 1,70,000 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நீக்கியுள்ளது.

இதில் 23,750 கணக்குகளிலிருந்து மட்டும் சீனாவிற்கு ஆதரவாக பல இலட்சம் ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன.

ஹாங்காங் மற்றும் கொரோனா குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளில், சீனாவிற்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் சீன மொழிகளில் பிரசாரம் செய்யப்பட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் ட்விட்டர் வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளில் வாழும் சீனர்கள் இதுபோன்ற ட்வீட்களை பதிவிட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்