இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அப்பேச்சுவார்த்தைகளில் சாதகமான
சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் நிலைமைகள் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.