
இலங்கையில் வெள்ளைப்பூண்டின் விலை தங்கத்தின் விலையைப் போல் கிடு கிடுவென அதிகரித்துள்ளது.
சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தர வேண்டிய கப்பல்கள் தாமதமடைந்துள்ளமையினால் வெள்ளைப்பூண்டின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனால், 290 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு, தற்போது 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.