சீனக்குடா விமானப்படை தளத்துக்கு அருகில் உள்ள வளைவொன்றில் கப் ரக வாகனமொன்று, பாதையை விட்டு விலகி விபத்து; சாரதி காயம்!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள திருகோணமலை – சீனக்குடா விமானப்படை தளத்துக்கு அருகில் உள்ள வளைவொன்றில் கப் ரக வாகனமொன்று, பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.

வாகனச் சாரதியின் கவனயீனத்தால் இன்று (18)  அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்