சி.வி விக்னேஸ்வரன், ரணிலுக்கு ஆதரவு

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக தான் வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, -தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

நேற்று (19) இரவு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ,ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட சஜித் அணியினர் கூட்டமைப்பிடம் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும விற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருமித்த ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும வெற்றி பெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை , காணி அபகரிப்பு , மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் காணி அபகரிப்பு, உடனடியாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சஜித் அணியினர் எழுத்து மூலம் வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும வுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்