
சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலனி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழந்ததுடன், 104 பேர் காயமடைந்திருந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 228 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.