சிறு வர்த்தக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியுடன் கடன் !

சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத சலுகை வட்டியின் கீழ் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.

சனச, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கி ஊடாக கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள சிறு வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்