
சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம்வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்துஅர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதிசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குக்கான தேசிய கூட்டுப் பொறிமுறையின்இரண்டாவது கூட்டம் கடந்த புதன்கிழமை (16) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கமற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (ஜனாதிபதி செயலகத்தின் உணவுப்பாதுகாப்புப் பிரிவு) சாந்தனி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதன் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.