சிறு­வனை போல் தோற்­ற­ம­ளிக்கும் 27 வயது இளைஞர்

சீனாவைச் சேர்ந்த 27 வய­தான ஓர் இளைஞர், பார்­வைக்கு ஒரு சிறு­வனைப் போல் தோற்­ற­ம­ளிக்­கிறார். இதனால் வேலை தேடிக்­கொள்­வதும் தனக்கு பெரும் சிர­ம­மாக இருந்­தது என அந்த இளைஞர் கூறு­கிறார். மாவோ ஷேங் எனும் இந்த இளைஞர் குவாங்டோங் மாகா­ணத்­தைச் சேர்ந்­தவர். 1995 ஆம் ஆண்டு பிறந்த இந்த இளை­ஞ­னுக்கு 27 வய­தா­கி­விட்­டது. ஆனால், ஒரு சிறு­வனைப் போன்ற தோற்­றத்துன் மாவோ ஷேங் உள்ளார்.

இதனால் வேலை தேடி சென்றால் தொழில் வழங்­கு­வ­தற்கு நிறு­வ­னங்கள் மறுப்பு தெரி­வித்­ததாக அவர் தெரி­வித்­துள்ளார். சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்­து­ப­வர்­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக அர­சாங்­கத்­தினால் அனுப்­பப்­பட்ட ஒரு சிறு­வனே மாவோ ஷேங் என நிறு­வன அதி­கா­ரிகள் சந்­தே­கிப்­பதே இந் நிரா­க­ரிப்­புக்கு காரணமாம்.

ஒரு தடவை தானும் தனது நண்­பரும் தொழிற்­சா­லை­யொன்றில் வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்­த­போது, தனது நண்­பரை மாத்­திரம் அந்­நி­று­வன முகா­மை­யாளர் தெரிவு செய்­த­தா­கவும் மாஷோ ஷேங் தெரி­வித்­துள்ளார்.

நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள தனது தந்­தைக்கு பொரு­ளா­தாரா ரீதி­யாக உத­வக்­கூ­டி­ய­வ­ராக குடும்­பத்தில் தான் மட்­டுமே உள்­ள­தா­கவும் ஆனால், தொழில் இல்­லா­ததால் அதை செய்ய முடி­ய­வில்லை எனவும் சீன சமூக வலைத்­தளம் ஒன்றில் அவர் தெரி­வித்தார்.

தனக்கு 27 வய­தாகி விட்­டது என்­பதை நம்ப மறுத்­த­வர்­க­ளுக்­காக தனது அடை­யாள அட்டை கொண்ட வீடி­யோ­வையும் அவர் பின்னர் வெளி­யிட்டார்.

அதன்பின் உள்­ளூரில் ஒரு பிர­ப­ல­மா­கி­விட்டார் மாவோ ஷேங். அதையடுத்து பல நிறுவனங்கள் தனக்கு தொழில் வழங்க முன்வந்ததாகவும் அவற்றில் ஒரு வேலைவாய்ப்பை தான் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்