சிறுவனை அடித்த ஆசிரியை கைது: அதிபர் தலைமறைவு

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்  தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (11) வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்த பாடசாலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.

இந்த நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றினைந்து குறித்த சிறுவன் மீது தாக்கியள்ளார்.

 வீடு சென்ற சிறுவனின் உடலில் தழும்புகள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11) முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்துள்ள ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும்  கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய  குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்