சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு!

வடமாகாண விவசாயம், கமநலசேவை, கால்நடை, அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல், சுற்றாடல் அமைச்சின் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று 21.01.2020 கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


வீட்டுத்தோட்டம், தேனீர் வளர்ப்பு, சொட்டு நீர்ப்பாசனம், ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு துறைகளில் விவசாயிகள், பண்ணையாளர்கள் என பல துறைகளை சார்ந்த 368 பேர் கௌரவிக்கப்பட்டனர்.


குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடமாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர்கள், விவசாய திணைக்கள பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முகநூலில் நாம்