
சிரிய இராணுவ உலங்குவானூர்தியொன்று அந்நாட்டின் வட கிழக்கு நகரான ஹமாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையொன்றின் போது விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த அதன் விமானி உயிரிழந்துள்ளார்.
மேற்படி உலங்குவானூர்தி பொதுமக்களின் குடியிருப்புக் கட்டிடடத்தின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் குடியிருப்புக் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் எவரும் சிக்கியிருந்தார்களா என்பது அறியப்படவில்லை.
இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.