சினிமா பிரியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

நாட்டின் சகல திரையரங்குகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகளின் திரையிடல்கள் கடந்த 105 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுகாதார ஆலோசனையினையை பின்பற்றி குறித்த திரையரங்குகளை மீள திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்