சினிமா நிச்சயதார்த்தம்!

இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கிவருகிறார். சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்குவரவிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நேற்று (ஜுன் 23) நடைபெற்றது. நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

இன்று நேற்று நாளை, அயலான் படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்தத்தின்போது மணமக்களுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்