சினிமா  துறை பிரபலம் காலமானார்

இயக்குநர் செல்வராகவனின் படங்களுக்குத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கோலா பாஸ்கர் ஹைதராபாத்தில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 55.

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.

தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோலா பாஸ்கர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜய் நடித்த போக்கிரி, வில்லு, தனுஷ் நடித்த குட்டி, 3 போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். கீதாஞ்சலி செல்வராகவன் தயாரித்த மாலை நேரத்து மயக்கம் படத்தை அவர் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா கோலா கதாநாயகனாக நடித்தார்.

கோலா பாஸ்கரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்