சிகை அலங்கார நிலையத்தில் கொலை!

பலபிட்டிய  படபொல நிந்தான பகுதியில்  நேற்று (02) இரவு 7.30 அளவில்    சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். என  பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதையில் இருந்த ஒருவரினால் சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக வருகைதந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த குறித்த இளைஞன் பலபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட போதே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளர் காணப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதில விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முகநூலில் நாம்