சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கான முக்கிய தகவல்!

சாரதி அனுமதி பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரம் வெளியிடுதல் உட்பட சேவைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.

அதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு அந்த மாவட்டங்களின் அனைத்து பொறுப்பான அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேரஹெர மற்றும் கம்பஹா அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளமையினால் பல பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய மேலதிக நேர கடமைகளை மேற்கொள்ளுமாறு தங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்து மட்டுப்படுத்தி சேவை வழங்குவதாக ஆணையாளம் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்