சாய் பல்லவிக்கு எதிராக பொலிஸில் புகார்!

மதத்தின் அடிப்படையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து பிரபல நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்துக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியொன்றில், காஷ்மீர் பண்டிதர்கள் அந்த காலத்தில் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் காட்டுகிறது. மத முரண்களைப் பிரச்னையாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றிருந்த முஸ்லிம் வாகன ஓட்டி ஒருவர் தாக்கப்பட்டு ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளன. இந்நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு எதிராக ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் தொடுத்துள்ள இந்த புகாரில் நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில் அவர் மீதான புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்