சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் சுயாதீனத் தன்மை குறித்து தீர்மானிக்க உண்மை விளம்பல் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக
கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி  சஹ்ரான் ஹஷீமின்,  மனைவி அப்துல்
காதர் பாத்திமா ஹாதியா வழங்கியுள்ள குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின்
சுயாதீனத் தன்மை குறித்து தீர்மானிக்க  உண்மை விளம்பல் விசாரணை ஒன்றினை
முன்னெடுக்க கல்முனை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்தின் கீழ் கோட்டை நீதிவானிடம்
வழங்கப்பட்டுள்ள குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை,
அப்துல் காதர் பாத்திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜராகும் சிரேஷ்ட
சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சவாலுக்கு உட்படுத்திய நிலையிலேயே, இந்த உண்மை
விளம்பல் விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பும்
எதிர்ப்பு வெளியிடாத நிலையில், இந்த வழக்கில் ஒரே ஒரு சான்றான ஒப்புதல்
வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம்
தீர்மானிப்பதாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி
அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்