சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..! 13 பேர் படுகாயம்!

ஏ-9 வீதியில் 190 ஆவது கிலோமீற்றர் கட்டை பிரதேசத்தின் வேளாங்கன்னி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்