சர்வதேச வர்த்தகத்திற்கான சர்வதேச வர்த்தக அலுவலகம் அமைக்க அரசாங்கம் தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம்
தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச வர்த்தகம் தொடர்பான  நிறுவனங்களால்  தனித்தனியாக
மேற்கொள்ளப்படும்   அணுகுமுறைகளில் காணப்படும்  குறைபாடுகளைத்
தவிர்ப்பதன் மூலமும் அதன் செயற்பாடுகளை   மிகுந்த செயற்திறனுடனும்
முறையாக  மேற்கொள்ளும் வகையிலும் இந்த புதிய அலுவலகம் நிறுவப்படும்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து,
பொருளாதாரத்திற்கு சர்வதேச வர்த்தகத் துறைகளின் அதிகபட்ச பங்களிப்பினை
வழங்க இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார மறுமலர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படாது மறைந்து காணப்படும்
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளின்  திறனைப் பயன்படுத்துவது
அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படை அங்கமாகும்.

அதற்கமைய, முதலில் தெற்காசியாவுடன் இணைந்தும், பின்னர் கிழக்கு நோக்கி
விஸ்தரிப்பதன் மூலம், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன்
இணைந்து, இறுதியாக உலகின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள்தொகையில்
30% உரிமையைக் கொண்டுள்ள “பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணி”
(Regional Comprehensive Economic Partnership, RCEP) உடன் இணைவதே
இலங்கையின் இலக்காகும்.

இதற்கு அடித்தளம் இடும் வகையில் சர்வதேச வர்த்தக அலுவலகம்  நாடாளுமன்ற
சட்டத்தின் மூலம் நிறுவப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்