சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 348 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குறித்த காலப்பகுதியில் அதிகளவானோர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 62 ஆயிரத்து 879 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் 39 லட்சத்து 61 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 36 ஆயிரத்து 810 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் கொவிட் 19 கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளதுடன் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, பிரேஸில் நாட்டில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 80 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 85 லட்சத்து 5 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 248 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் உலகலாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியான 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்