சர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இலங்கையர் ஒருவர் உருவாக்கிய சூப்பர் கார் பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சுவிஸின் ஜெனிவா நகரில் சர்வதேச மோட்டார் ஷோ கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் சுப்பர் கார்கள் பங்குபற்றவுள்ளன. இந்த நிலையிலேயே இலங்கை மென்பொருள் உருவாக்குனரான ஹர்ஷ சுபசிங்க உருவாக்கிய ‘வேகா’ சுப்பர் கார் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்