சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து இலங்கை மக்களிடம் கணக்கெடுப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப்பெறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இலங்கையின்60.5% மக்கள் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அண்மையில்மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.ஒக்டோபர் 21 முதல் 31 வரை, மாற்றுக்கொள்கை மையம் உள்ளிட்ட பல அரச சாராநிறுவனங்கள் 25 மாவட்டங்களில் ஆயிரம் பேரின் மாதிரியைப் பயன்படுத்தி இதுதொடர்பான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன.இந்த கணக்கெடுப்பில், 60.5% பேர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப்பெறுவது குறித்து தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.மேலும் தங்கள் சம்மதத்தை வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் 18 முதல்29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 24% பேர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறக்கூடாது என்றுகூறியுள்ளனர்.இதற்கிடையில், 56.8 சதவீதம் பேர் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாடு செல்லஅல்லது வேறு நாட்டில் வாழ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 77.2% பேரும் 30 வயதுக்குமேற்பட்டவர்களில் 45.4% பேரும் வெளிநாடு செல்லத் தயாராக இருப்பதாகதெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்