சர்வதேச சுற்றாடல் தினத்தினை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் திருகோணமலையில் (படங்கள் இணைப்பு)

திருகோணமலை கரையோரப் போனால் மற்றும் கரையோர    மூலவள முகாமைத்துவ திணைக்களம்,திருகோணமலை பிரதேச செயலகம்,Green Forest Ceylon,ஆகியவை இணைந்து சர்வதேச சுற்றாடல் தினத்தினை பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது .திருகோணமலை மான்கள் சரணாலையப்பகுதியுள் காணப்படட பார்த்தீனிய செடி  அகற்றுதல்,

உடைந்த  போத்தல் கண்ணாடிகளை அகற்றுதல் ,மற்றும்       பிளாஸ்டிக், பொலித்தின்கள் அகற்றுதல், மரநடுகை, ,கடற்கரை சுத்தம் செய்தல், சுற்றுச்சூழல் பிரச்சாரம் செய்தல், கோணேசர் கோயில் அடிவாரக் கடல் பரப்பில் குறிப்பிட்ட அளவு பகுதியில் காணப்பட்ட பொலித்தீன்,பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல். போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் தின நிகழ்வு   முன்னெடுக்கப்பட்டது.
 இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர்,பிரதேச சபை தவிசாளர்.,செயலாளர்,பொலிஸ் திணைக்களத்தின் ,பிராந்திய வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள்,திணைக்கள ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பொது அமைப்புக்களின்,சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்