சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் மொட்டுக் கட்சி

புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவர வேண்டுமெனவும், இதற்கான சர்வஜன
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
தெரிவித்துள்ளது.

கட்சி தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பியே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை
ஜனாதிபதி நடத்துவதற்கு தீர்மானித்தால், புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன
வாக்கெடுப்பையும் ஒன்றாக நடத்த வேண்டும் எனவும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்