சம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சம்பியன் பட்டம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப்பை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.

அவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றமையின் மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்