சம்பளத்தை குறைத்த கீர்த்தி சுரேஷ்!

கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட சில நடிகர்கள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துள்ளனர். அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷும் சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக அதை நான் வரவேற்கிறேன்.

நான் நடிக்கும் படங்களுக்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்வேன். நான் மட்டுமல்ல சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற 19-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்