சமூக கட்டுப்பாடுகள் மீண்டும் வருமா?

கொ​ரோன வைரஸ் உக்கிரமடைந்த காலப்பகுதியில் சமூகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் நாட்டு மக்களின் செயற்பாடுகளை கண்காணித்தே மேற்கொள்ளப்டுமென பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதனால் நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமெனவும் அவர் அறிவுருத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா அச்சுறுத்தல் நாட்டிலிருந்து முழுமையாக மறைந்துவிடவில்லை எனத் தெரிவித்த அவர், கொரோன வைரஸ் பரவிய ஆரம்ப காலத்தில் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக காண்பித்த அக்கறையை தற்போது நாட்டு மக்கள் காண்பிப்பதாக தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகநூலில் நாம்