சமூகத்தில் கொரோனோ தொற்று பரவலைத் தடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன: இராணுவத் தளபதி!

சமூகத்தில் கொரோனோ தொற்று பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 370 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 253 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனையவர்களுக்கான பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் மத்திய நிலையத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகநூலில் நாம்