சமரச முயற்சியில் இறங்கிய சிம்பு… கைவிடப்பட்ட திரைப்படம் மீண்டும் தொடக்கம்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு – கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சிம்பு – ஞானவேல் ராஜா இடையேயான மனஸ்தாபத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சிம்பு, ஹன்சிகாவுடன் மஹா படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது முஃப்தி பட ரீமேக்கை மீண்டும் துவங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் சிம்பு – ஞானவேல் ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முகநூலில் நாம்