
சமத்துவ கட்சியின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வானது நேற்று (08-03-2020) கிளிநொச்சி பச்சிலைப்ள்ளி பிரதேசத்தில் யாழ் பல்கலைகழக மாணவி பாலாஜினி பாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது
பெரும் திரளான பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வானது மிக சிறப்பாக இடம்பெற்றது
2020 சர்வதேச பெண்கள் தின நிகழ்வை முன்னிட்டு சமத்து கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அனைத்திலும் சமத்துவம்’ என்ற நிலைப்பாடே பெண்களுடைய உரிமைகளையும் அவர்களுடைய விடுதலையையும் சாத்திப்படுத்தும். இந்த உண்மையின் உறுதியேற்பிலேயே சமத்துவக் கட்சி பெண்களின் விடுதலைக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையிலேயெ 2020 சர்வ்தேச பெண்கள் தினத்தையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உலகம் அழகாக இருக்க வேண்டுமென்றால் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும்.
1910 ஆண்டு உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டின்போது மார்ச் 08 சர்வதேசப் பெண்கள் நாள் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவே வேண்டியுள்ளது. ஆணுக்கு நிகர் பெண்ணென்று சொன்னாலும் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதிலேயே பாரபட்சம் இன்னும் நடைமுறையில் உண்டு. பெண்கள் இன்னும் பாதுகாப்பற்ற அச்சம் நிறைந்த சூழலிலேயே வாழ வேண்டியுள்ளது.
ஆகவே பெண்களின் வாழ்வில் நாம் கவனம் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான பிரச்சினைகளை இந்தப் பெண்கள் நாளில் பேசுபொருளாக எடுத்துள்ளோம்.
பெண்களுக்கான சமத்துவத்தையும்இ உரிமைகளையும் பேச்சிலும், எழுத்திலும் கொண்டிராது நடைமுறையில் எமது சமத்துவ கட்சியானது பேணி வருகிறது.
சகலரையும் போன்று சமூக நீதி பெண்களுக்கு வழங்கப்படல் வேண்டும், எமது பெண்கள் இனவிடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலையிலும் வியத்தகு ஆற்றலுடன் போராடி தமது ஆளுமையை வரலாற்றில் வெளிப்படுத்தியுள்ளனர். வியத்தகு அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர். ஆயினும் இன்னும் பெண்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பது துயரமே. அவர்களுடைய அந்த விடுதலைக் கனவை மனத்திலே கொண்டு அதை வெற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்கள் மீது அதிகரித்துள்ள வன்முறைகளை இல்லாதொழிக்க வேண்டும், போரின் பின்பு ஏற்பட்ட பாதிப்புக்களில் அனேகமானவை பெண்களை சார்ந்ததாகவே உள்ளதால் இதைச் சீரமைப்பதற்கான சிறப்புப் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும், கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு தொடர்ந்து நிலவும் தடைகள் நீக்கப்பட வேண்டும்.
ஆண் பெண் என்ற அடிப்படையில் சம்பளத்தை வழங்காமல் உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
நுண்கடன் திட்டத்தினால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து பெண்களை விழிப்படைய வைத்து அவர்களுக்குப் பாதுகாப்பான சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுகின்ற பெண்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
போன்ற விடயங்களை 2020 சர்வதேச பெண்கள் தினத்தில் சமத்துவ கட்சி வலியுறுத்தி நிற்கிறது.
எங்கள் பெண்களின் ஆற்றல்களையும், ஆளுமைகளையும் பயன்படுத்தி அழகான தேசத்தை கட்டயெழுப்ப வேண்டும். அதற்காக அவர்கள் முன்னுள்ள எல்லாத் தடைகளையும்,சவால்களையும் தகர்த்தெறிந்து வழிசமைக்க இந்நாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





