சமத்துவக் கட்சி 7 உள்ளராட்சி மன்றங்களில் வேட்பு மனுத்தாக்கல்

சமத்துவக் கட்சி இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா
மாவட்டங்களில் 7 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு
மனுக்களை இன்று தாக்கல் செய்தது.
.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்
கட்சி கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச
சபைகளுக்கும், யாழ்ப்பாணம் பருத்திதுறை நகர சபைக்கும் வவுனியாவில் வெங்கல
செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்கு ( தமிழ்) பிரதேச சபைக்கும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் துனுக்காய் பிரதேச சபைக்கும் வேட்பு மனுத்
தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்