
சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம் இன்று (28) வவுனியாவில்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் சென்ற் அன்ரனி ஒழுங்கை, கந்தசுவாமி கோவில் வீதியில்
1454/1 முகவரியில் குறித்த அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
சமத்துவக் கட்சியின் தவிசாளர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பெயர் பலகையினை கட்சியின் தவிசாளர் திரை நீக்கம் செய்து வைக்க,
அலவலகத்தினை கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
மு. சந்திரகுமார் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற
உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர், வடக்கு மாகாண சபையின் முன்னாள்
உறுப்பினர் நடராஜன்,கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மத்திய குழு
உறுப்பினர்கள், அமைப்பாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.