சமத்துவக் கட்சியின் ஒரு பகுதி அமைப்பாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இந்
நியமனக் கடிதங்களை கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான மு. சந்திரகுமார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி
மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனக்
கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, ஏனைய வட்டார அமைப்பாளர்கள் மற்றும்
பிரதேச செயற்பாட்டாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் அடுத்தக் கட்டமாக
வழங்கி வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்சியின் கட்டமைப்புகளை விரிவுப்படுத்தி மக்கள் பணிகளை மேலும்
முன்னோக்கி கொண்டு செல்வதற்காக உத்தியோகபூர்வமாக இந் நியமனங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்