சன் பிக்சர்ஸ்-அஜித் படம் குறித்து வந்த உண்மை தகவல் இதோ

அஜித் இவரின் கால்ஷிட் கிடைக்குமா என்று பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் ஏ.எம்.ரத்னம் மூன்று முறை, சத்யஜோதி நிறுவனம் இரண்டு முறை அஜித் படத்தை தயாரித்துள்ளனர்.

தற்போது போனிகபூர் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை படத்தை தயாரித்து வருகின்றார், இந்நிலையில் அஜித் அடுத்து யாருக்கு கால்ஷிட் தருவார் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

அந்த வகையில் அஜித் அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷிட் தந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.

இதுக்குறித்து பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவருடைய யு-டியுப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார்.

இதில் ‘அஜித், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் செய்வது என்பது முற்றிலும் வதந்தி மட்டுமே’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து பலரும் அஜித் அடுத்து யாருக்கு கால்ஷிட் தருவார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி, பொறுத்திருந்து பார்ப்போம்.

முகநூலில் நாம்