
சதுரங்க ஆட்டத்தில் ஏழு வயது சிறுவனின் விரலை ரோபோ உடைத்துள்ளது. ரோபோ சிறுவனுடன் அந்த ஆட்டத்தில் போட்டியிட்டது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சதுரங்க ஆட்டத்தில் ரோபோ தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு சிறுவன் போதுமான நேரம் வழங்கவில்லை. அதற்குப் பதிலடியாக இயந்திர மனிதன் சிறுவனின் விரலை உடைத்தது.