சட்டவிரோத மீன் பிடி நிறுத்தப்படாவிட்டால் வடக்கை முடக்குவோம் – அன்னராசா

சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி
மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக , யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்
கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை நிறுத்துமாறு
கோரும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு
தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின்
போராட்டமானது ஒரு நியாயமான போராட்டம். அந்தப் போராட்டத்திற்கு நியாயமான
தீர்வு கிடைக்க வேண்டும் .குறித்த போராட்ட தொடர்பாக ஆராய்வதற்காக
கொழும்பிலிருந்து வந்த குழு ஒன்று அவர்களது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து
அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் 12-ஆம் தேதி தீர்வு வழங்கும் என ஏற்கனவே
அறிவித்திருந்தார்கள்.

எதிர்வரும் 12-ஆம் தேதி மீனவர்களுக்கு சார்பாக தீர்வு வராவிட்டால் வடக்கு
மாகாணத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாங்க தீர்மானித்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்