சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது – அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர்

இலங்கையில் இருந்து  அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை
அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன்,
சட்டவிரோத குடியேற்றவாசிகளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்து
திருப்பி அனுப்புவார்கள். எனவே  சட்டவிரோத ஆள்கடத்தல்காரரிடம் உங்கள்
பணத்தையும் உயிரையும் பணயம் வைத்து பயணிக்கவேண்டாம் என இலங்கை
அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல்
பொலிஸார் றோபர் வில்சன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆள்கடத்தல் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஸ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ஜ.பி.ரி சுகதபால தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள்
மற்றும் ஊடகவியலாளர்கள் உடன் இலங்கை  அவுஸ்திரேலியா துப்பறியும்
கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தலைமையிலான
ஃபெடரல் பொலிஸ் ஊடக அதிகாரி மைக்கல் உட்பட பொலிஸ் அதிகாரிகள்  இடையே
நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் அத்தியட்சகர் காரியலத்தில் இடம்பெற்ற
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்