சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 11 பேர் கைது

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியா செல்வதற்கு
வீடொன்றில் தங்கியிருந்த 11 பேர்  நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேசாளை பொலிஸ்
பிரிவிற்கு உட்பட்ட 8 ஆம் இலக்க பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 6 ஆண்களும், 2 பெண்களும் மற்றும் 3
சிறுவர்களும்  உள்ளடங்குகின்றனர். சந்தேகநபர்கள் அனைவரும் கிளிநோச்சி
பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர்
, பெண்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு , ஆண்கள்
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்