சட்டவிதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சட்டவிதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச் சென்ற லொறி சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாவலி கங்கையில் இருந்து கொழும்பிற்கு லொறியில் மணல் ஏற்றிச் சென்றபோது அனுமதிப் பத்திரத்தில் வழங்கப்பட்டிருந்த கோட்பாடுகளை பின்பற்றாது நடந்து கொண்டதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்கேதநபர்கள் இன்றையதினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் என கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்