சங்கமன் கண்டி பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் சங்கமன் கண்டி பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிந்துள்ளார்.

நான்கு பேர் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்றிரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய 50 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்குள்ளான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்​.

முகநூலில் நாம்