சகல அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம்!

அரச இயந்திரத்தில் காணப்படும் திறன்னின்மை, தாமதம், மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் சகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

சேவை பெறுனர் சேவை வழங்குனரிடம் செல்வதற்குப் பதிலாக இணையம் மூலம் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார். அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களில் உள்ள சகல தரவுகளும் தொலைத்தொடர்பு மற்றும் தொழினுட்ப நிறுவனத்தின் தலையீட்டின் மூலம் சேகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய மக்களோடு நெருக்கமாக செயற்படும் அனைத்து அரச நிறுவனங்களையும் முதன்மைபடுத்தி அவற்றை வலையமைப்புக்குள் கொண்டு வரப்படவுள்ளன.

இந்த புதிய தொழிநுட்பத்தின் மூலம் இணையத்தை பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் கடவூச்சீட்டு, பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் அத்துடன் காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல சேவைகளை விரைவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு தரவு கட்டமைப்பில் தரவுகளை உள்வாங்குவதன் ஊடாக நேரத்தைக் குறைத்து திறன்யின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றை தடுக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் வரிவிதிப்பு முதல் ஓய்வூதியம் பெறுவது வரையான பலதரப்பட்ட துறைகளில் தான்னியக்க (Automation) சேவையை இலகுவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

முகநூலில் நாம்