கோஸ்டா ரிகாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கோஸ்டா ரிகாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கோஸ்டா ரிகாவில் ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 362பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 55ஆவது நாடாக விளங்கும் கோஸ்டா ரிகாவில் ஐந்தாயிரத்து 919பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 91ஆயிரத்து 724பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 489பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்து நான்காயிரத்து 719பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்