கோரோனா வைரஸ் இலங்கையில்… கண்டுபிடிக்கப்பட்டார் மற்றுமொரு நபர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாம் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இவர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுகயீனம் மற்றும் இருமல் காரணமாக சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு வருகைத் தந்திருந்த வேளை, இவரை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஏற்கனவே சீன நாட்டைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

முகநூலில் நாம்