“கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் வெள்ளிவரை காலக்கெடு

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர். “சட்டவிரோத கட்டமைப்புகளை” அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்