கோட்டாவை ஜனாதிபதியாக்கவே ஈஸ்டர் தாக்குதல்: சந்திரிகா குற்றஞ்சாட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர்
தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என
சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளை தான் நம்புவதாக
தெரிவித்தார். எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு
செய்யும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை   அரசியல் ஆதாயத்துக்காக
பயன்படுத்திக்கொள்வதற்கு  ராஜபக்ஷ குழாம் முயற்சிக்கின்றது என்றும் அவர்
குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்