
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும், நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதுபோல, நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜபகருணவே மேற்கண்டவாறு தெரிவித்தார்.