கொழும்பை அச்சுறுத்தும் முதலையின் நடமாட்டம் !

 கொழும்பு மட்டக்குளி களப்பு பகுதியில் இன்று முற்பகல் முதலை ஒன்று சுற்றித்திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இதற்கு முன்னர் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்