
கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவு, மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. அந்த வகையில் கொழும்பு நகரின் சிற்றுண்டிசாலைகளில் வழங்கப்படும் தேநீரில் சுவை தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சில சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் தேநீரை தயாரிப்பதற்காக, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தேயிலை பயன்படுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.